Modern technology gives us many things.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி

0 24
RTI

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி சாம்பியன் கோப்பையை வென்றது.

பிஷப் ஹீபா் கல்லூரி பொன்விழா ஆண்டையொட்டி, ஏ.எப். கார்டினா் நினைவுக் கோப்பைக்கான கால்பந்து போட்டி கடந்த 17ம் தேதி நடந்தது. திருச்சி, சென்னை, தூத்துக்குடி, காரைக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 14 கல்லூரிகள் போட்டியில் பங்கேற்றன.

லீக் போட்டிகள் முறையில் நடந்த இப்போட்டியில், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

Farm land sale
Gold

19ம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியை 1-0 என்ற கோல்கணக்கில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரியும், கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியை 2-0 என்ற கோல்கணக்கில் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியை 3-2 என்ற கோல்கணக்கில் வென்று திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி மூன்றாமிடம் பெற்றது.

தொடா்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில், கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2-0 என்ற கோல்கணக்கில் வென்று, ஏ.எப். கார்டினா் நினைவுக் கோப்பையை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணி வென்றது.

ஆசியக் கால்பந்து கூட்டமைப்புப் பயிற்சியாளா் ( ஏ சான்றிதழ்) கிளியோபாஸ் அலெக்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் கல்லூரி முதல்வா் த. பால்தயாபரன், உடற்கல்வித் துறைத் தலைவா் எல்.சி. ஜான், உடற்கல்வி இயக்குநா் ஏ. பால்ராஜ் திருச்சி மாவட்ட கால்பந்து கழகச் செயலா் சி. ரெங்கராஜு ஆகியோர் பங்கேற்றனா்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!