திருச்சி பிஎஸ்என்எல் கல்வி உதவிக்குழு சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை

0
ntrichy

திருச்சியில் பிஎஸ்என்எல் கல்விஉதவிக்குழு சார்பில் அரசு பள்ளிகளில் படித்து அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநில துணைச் செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். சுப்பிரமணியன், சசிக்குமார், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன், பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க அகில இந்திய தலைவர் சிவக்குமார், கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டினர். மொத்தம் 25 மாணவ, மாணவிகளுக்கு ரூ. ஒரு லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்–்டது. இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கணேசன் வரவேற்றார். மனோகரன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.