சிறந்த இளைஞர் மன்ற விருது வழங்கும் விழா

0
ntrichy

 

சிறந்த இளைஞர் மன்ற விருது வழங்கும் விழா

 

திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் பாப்பாக்குறிச்சி காட்டூர் நேரு இளையோர் மன்றம் சார்பில் உலக நுகர்வோர் விழிப்புணர்வு தின விழா மற்றும் சிறந்த இளைஞர் மன்ற விருது வழங்கும் விழா கடந்த 29-ம் தேதி பாப்பாக்குறிச்சியில் நடைபெற்றது.

மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமையேற்றார். அண்ணல் மகாத்மாகாந்தி நினைவு அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவரம்பூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மகேஸ் பொய்யாமொழி “குடும்ப நலம் மற்றும் நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தொழிற்கல்வி பயிற்சி, பெண்கள் மேம்பாடு, பல்வேறு கிராமங்களில் கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல், இளையோர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளித்தல், சமூக விழிப்புணர்வு நாடகம் நடத்துதல், மத்திய மற்றும் மாநில அரசு நலத்திட்டங்களை எளியோர்களுக்கு பெற்று தருதல், சுகாதார விழிப்புணர்வு போன்ற பணிகளை தொடர்ந்து செய்துவரும் பாப்பாக்குறிச்சி காட்டூர் நேரு இளையோர் மன்றத்திற்கு சிறந்த இளைஞர் மன்றத்திற்கான விருது ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி, வாழ்த்தி பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.