Modern technology gives us many things.

காவேரி மருத்துவமனை சார்பில் தேசியளவிலான டென்னிஸ் இறுதிப்போட்டி: 

0 23
RTI

திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து கடந்த 10 ஆம் தேதி முதல் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியை நடத்தி வந்தது. ஆண்கள் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில்  தமிழ்நாடு கர்நாடகம் அரியானா மராட்டியம் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 வயதிற்குட்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தரவரிசை முன்னணி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினார்கள் நேற்று முன்தினம் இரட்டையர் ஆட்டத்தின் இறுதிப்போட்டி நடத்தப்பட்டு சாம்பியன் பட்டம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நிறைவு நாளான சனிக்கிழமை பிற்பகல் ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தின் இறுதிப்போட்டி நடந்தது. ஆண்களுக்கான ஆட்டத்தில் கர்நாடக முன்னணி வீரர் நித்திலன் எரிக் – தமிழக முன்னணி வீரர் பிரகதீஸ் சிவசங்கர் ஆகியோர் விளையாடினர் இருவரும் தீவிரமாக விளையாடி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தினர். முடிவில் 6-3, 7-5 என்ற புள்ளி கணக்கில் கர்நாடக வீரர் நித்திலன் எரிக் வெற்றி வாகை சூடி சாம்பியன் ஆனார். ப்ரகதீஸ் சிவசங்கர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

Farm land sale
Gold

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான தெலுங்கானாவை சேர்ந்த சஞ்சனா ஸ்ரீமளா – தமிழக முன்னணி வீராங்கனையான லட்சுமி பிரபா ஆகியோர் விளையாடினர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஆக்ரோஷமாக விளையாடினர். இருப்பினும் தனது அனுபவமிக்க ஆட்டத்தால் லட்சுமி பிரபாவை திணறடிக்க செய்து 6-2, 6-4 என்ற புள்ளி கணக்கில் சஞ்சனா ஸ்ரீமளா வெற்றியை தனதாக்கி சாம்பியன் ஆனார்.

மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முன்னணி வீரர் நித்திலன் எரிக், வீராங்கனை சஞ்சனா ஸ்ரீமளா ஆகியோருக்கும் இரண்டாம் இடம் பெற்ற முன்னணி வீரர் ப்ரகதீஸ் சிவசங்கர், வீராங்கனை லட்சுமி பிரபா ஆகியோருக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்களை திருச்சி காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் Dr செங்குட்டுவன் வழங்கி பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்க தலைவர் மது, பொருளாளர் அசோக் குமார், திருச்சி யூனியன் கிளப் இணை செயலாளர் விஜயகுமார், ஆபீசர்  கிளப் செயலாளர் செல்லக்கன் ஞானசீலன் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!