காவிரிநதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம்

0
ntrichy

திருச்சி, திருவெறும்பூர், ரங்கத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் காவிரிநதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் குமார் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டங்கள் மாநகர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி நாளை (18ம் தேதி) மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் கூட்டத்திற்கு அமைச்சர்கள் பி.தங்கமணி, வெல்லமண்டி நடராஜன் மற்றும் கவிஞர் முத்துலிங்கம், தஞ்சை ப.சேகர் ஆகியோர் தலைமை வகித்து சிறப்புரையாற்றுகின்றனர். 20ம்தேதி ரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாசறை மாநில செயலாளர் பரஞ்சோதி, அமைச்சர் வளர்மதி, எழுத்தாளர் தில்லை செல்வம், பாளை ராஜேந்திரன் ஆகியோர் பேசுகின்றனர். 21ம் தேதி திருவெறும்பூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் வாரியத்தலைவர் லியாகத் அலிகான், குப்பண்ணா விவேகானந்தன் ஆகியோர் பேசுகிறார்கள். இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.24ம் தேதி திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, அதிமுக செய்தி தொடர்பாளர் தில்லை கோபி ஆகியோர் பேசுகின்றனர். இக் கூட்டங்களில் மாநகர் மாவட்ட செயலாளர் குமார் எம்.பி உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். கூட்டங்களில் அதிமுக அனைத்து அணி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.