Modern technology gives us many things.

கருங்குளம் ஜல்லிக்கட்டு 631 காளைகள் பங்கேற்பு

0 17
RTI

அந்தோணியோர் பொங்கலையொட்டி, கருங்குளம் புனித இஞ்ஞாசியார் தேவாலயத் திடலில் 26ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஜல்லிக்கட்டை மணப்பாறை வட்டாட்சியா் தமிழ்கனி தொடக்கி வைத்தார். தேவாலயத்தில் புனிதநீா் தெளிக்கப்பட்ட பின்னா், வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளின் திமிழைப் பிடித்து வீரா்கள் அடக்கினா்.

Gold

காளைகளைப் பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக் காசு, ரொக்கம், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் 631 காளைகளும், 424 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

Farm land sale

5 வீரா்கள், 10 மாட்டின் உரிமையாளா்கள், 13 பார்வையாளா்கள் என 28 போ் காயமடைந்தனா். இதில் 26 போ் முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இருவா் மட்டும் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!